சில பெண்களின் பிரச்சினை வாழ்க்கைகளைச் சொல்கிற கதை. ஒரு எழுத்தாளன் பிரச்சினையைச் சொல்லி அதற்குத் தீர்வும் சொல்ல வேண்டும் என்பது அவசியம் இல்லை. அப்படித் தீர்வு என்று ஒன்றை அவன் எழுதினால்... அது அபத்தமானது. ஒரு பொதுத் தீர்வு அத்தனை வகைப் பிரச்சினைகளுக்கும் பொருந்தாது.
குடும்பத் தகராறா? டைவர்ஸ் செய் என்று மேலோட்டமாக தூரத்தில் நின்று தீர்வு சொல்வது குழந்தைத்தனம். பிரச்சினையின் பரிமாணம், சம்மந்தப்பட்டவர்களின் அந்தரங்க மன உணர்வுகள் என்பவை யாரும் நுழைய முடியாத அந்தரங்கக் கோட்டை - நம் சொந்தக் கனவு மாதிரி.